Tuesday, 27 September 2011

பயணத்தின் போது...

பயணத்தின் போது...
பின்னால் நகரும் மரங்களின் ஊடே
பயணிக்கிறது
பழைய நினைவுகள் !
நம்மை தொடரும்
நிலவின் ஒளியில்
நனைகிறது
நிகழ்கால
நிமிடங்கள்  !
முகத்தில் வீசும்
மெல்லிய காற்றில்
மௌனிக்கிறது
மனதின் ஓசைகள் !
பயணமென்பது
சுவாரசியத்தின் உச்சம் !
உறங்கா இரவின் இதமான மிச்சம் !!